தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு:அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை கொளத்தூரில் அமுதாம்பிகை உடனுறை சோமநாதசுவாமி கோயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலுக்கு 2014 பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், கோயில் நிதி ரூ.2.29 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.71 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் 13 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு நடந்தது.

இந்த விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூளை, வெங்கடாஜலபதி பரிபாலன சபா மரக் கிளைகள் மற்றும் வேர்கள் சுவர்களில் ஊடுருவி முற்றிலும் சிதிலமடைந்திருந்த நிலையில், 2023ம் ஆண்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக இடிந்து விழுந்து விட்டது.

இந்நிலையில் அமைச்சர் நேரில் பார்வையிட்டு, இடிந்த சபாவை அகற்றி, தொன்மை மாறாமல் புதிய கட்டுமானம் மேற்கொள்ள உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, ஆணையரின் பொது நலநிதி ரூ.72 லட்சம் செலவில் சுண்ணாம்பு காரை மற்றும் கடுக்காய் நீர் கலந்த காரைப் பூச்சு கட்டுமானத்துடன் தொன்மை மாறாமல் பரிபாலன சபா புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர் சேகர்பாபு பக்தர்களின் வழிபாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார்.

Related Stories: