ஊட்டி நகர திமுக., சார்பில் சமத்துவ பொங்கல் விழா

ஊட்டி,ஜன.12: தமிழர் திருநாளான தை திருநாளை முன்னிட்டு திமுக., சார்பில் சமத்துவ பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊட்டியில் நகர திமுக., சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் பில்லன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பொங்கல் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுக்கு ஊட்டி நகர திமுக., சார்பில் வேட்டி, சேலை, கம்பளி, காலண்டர் ஆகியவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர்கள் இச்சுபாய், ரீட்டமேரி, நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜா, எல்க்ில் ரவி, பி.ரவி, கார்டன் கிருஷ்ணன், மகேஷ், மஞ்சுகுமார், புஷ்பராஜ், காந்தல் சம்பத், தியாகு, ேபட்டரி செல்வம், செல்வராஜ், அன்வர்பாஷா, ஹென்றி, மகளிர் அணியை சேர்ந்த கீதா, வாணீஷ்ரி, புஷ்பா, நாகமணி, லூவிசா, வனிதா, ப்ரியா, கண்ணகி, வாசுகி, முபீனா, சாந்தினி பாணு, பிருந்தா, கவிதா, மகாலட்சுமி உட்பட மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>