வெஸ்ட் பாம்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 45 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹெர்னாண்டசை மன்னிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பைடன் கையெழுத்து ரத்து: மேலும் ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது.
பைடனின் பெரும்பாலான உத்தரவுகள் ஆட்டோபென் முறையில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. ஆட்டோபென் முறையில் கையெழுத்திடும் முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓவல் அலுவலகத்தில் பைடனைச் சுற்றி வந்தவர்கள் அவரிடமிருந்து அதிபர் பதவியைப் பறித்தனர். ஜோ பைடன் நேரடியாக கையொப்பமிடாத அனைத்து நிர்வாக உத்தரவுகளையும் நான் ரத்து செய்கிறேன் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
