புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தற்போது புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஆளுநர் தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டும், அவர் பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்டு திரும்பி செல்ல வேண்டும். கஒன்றிய அரசோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிற போர் நமது இனத்திற்கான போர். மாநில உரிமைகளை காக்கின்ற போர். அதற்காக நாங்கள் அவருக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
