தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவராக அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

திருச்செந்தூர், ஜன. 11: தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகத் தலைவராக மீண்டும்  தேர்வு செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்செந்தூர் மொகுதூம்பள்ளி அருகே உள்ள தனியார் உணவக அரங்கில் மாவட்டத் தலைவரான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதையடுத்து பார்வையாளர்களான தமிழ்நாடு அமெச்சூர் கபடிக்கழக நிர்வாகி பாலசுப்பிரமணியராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, விளையாட்டு ஆணைய பயிற்சியாளர் (நீச்சல்) மணிகண்டன் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகத் தலைவராக அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் செயலாளராக கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளராக ஜிம்ரீஸ், ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனா விருதுபெற்ற மணத்தி கணேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர்களாக விஸ்வநாதன், பாலசுப்ரமணியம், ரங்கநாதன், அந்தோனிராஜ், இளையராஜா, அய்யாத்துரை பாண்டியன், டிடிசி ராஜேந்திரன், இணைச்செயலாளர்களாக ராஜா, சுயம்பு, ஆன்ட்ரூஸ், அந்தோனி, பொன்ராஜ் சசிகுமார், பரதன், நடுவர் குழு தலைவராக கண்ணன், டெக்னிகல் நிர்வாகியாக கரிகாலன், கன்வீனராக மைக்கேல், உதவி கன்வீனர்களாக தாமஸ் ராஜசெல்வம், ரஜேஷ்கண்ணன், அசோக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு கபடி வீரர்கள், திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

Related Stories: