டெல்லி: டெல்லியில் குழந்தைகள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியால் எப்படி அமைதியாக இருக்கிறது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் டெல்லியில் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் அனைவரும் கூறுவது ஒன்றுதான் தங்களுடைய குழந்தை நச்சுக்காற்றை சுவாசித்து வளர்வதாக அவர்களின் தாய்மார்கள் கூறியதை குறிப்பிட்டுள்ளார்.
மூச்சி விட முடியாமல் குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து, அச்சத்துடன் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். டெல்லியில் குழந்தைகள் மூச்சுத் திணறலால், பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி அவர்களே உங்களால் மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் அரசு என் அவசரத்திட்டத்தை இன்னும் வகுக்கவில்லை என்றும் ராகுல் கேட்டுள்ளார். காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் உடனடி விவாதம் நடத்தி இந்த சுகாதார அவசர நிலையை சமாளிக்க கடுமையான செயல்படுத்த கூடிய செயல் திட்டமும் தான் தேவை சாக்குபோக்குகள் அல்ல என்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
