பக்தர்கள் வேதனை வேளாண் சட்டங்களை ரத்து கோரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணி, பிரசாரம்

திருவாரூர், ஜன.11: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருவாரூரில் நேற்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணி, பிரசாரத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நீதி கேட்டு நெடும்பயணம் நிகழ்ச்சியானது பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நாகை மாவட்டத்திலும், நேற்று திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து பேரணியானது துவங்கி பனகல் சாலை வழியாக பழைய பஸ் நிலையத்தை அடைந்து அங்கு பிரசார இயக்கம் நடைபெற்றது.

 இதில் பி.ஆர். பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நாகை எம்எல்ஏவுமான தமிமுன்அன்சாரி மற்றும் காவிரி விவசாய சங்க பொறுப்பாளர்கள் வரதராஜன், புண்ணியமூர்த்தி, வெங்கடேசன், கிருஷ்ணமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி:  தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் துவங்கி, தஞ்சை ராஜராஜசோழன் சிலை வரை நீதி கேட்டு செல்லும் நெடும்பயணம் நடந்தது. இக்குழுவினருக்கு திருத்துறைப்பூண்டி புதிய பஸ்நிலையம் அருகில்  விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் பி.ஆர். பாண்டியன் பேசினார். பின்னர் முத்துப்பேட்டை வழியாக தஞ்சை நோக்கி பயணக்குழுவினர் சென்றனர்.

Related Stories: