பந்தலூரில் மாவட்ட இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பந்தலூர், நவ.27: பந்தலூரில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் பஜாரில் மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளிதரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பிரட், பழம் ஆகியவை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நெல்லியாளம் நகராட்சி வளாகத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். அதன்பின் துப்புரவு பணியாளர்களுக்கு மதியம் அருசுவை உணவு வழங்கப்பட்டது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பந்தலூர் பஜாரில் நெல்லியாளம் நகர இளைஞரணி சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சேகர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் நவுபல், நகர்மன்ற தலைவர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிரதநிதி குமார், நகர்மன்ற துணை தலைவர் நாகராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பன்னீசெல்வம், ஆசைத்தம்பி, ஞானசேகர், மாவன்னாதுறை, முகமது, மூர்த்தி, விஜயன், நகர இளைஞரணி அமைப்பாளர் நவநீதராஜ், சிவராமன், கார்த்திகேசன், தமிழழகன், ஐடிவிங் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: