அனுமதியின்றி உடைகல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

ஏழாயிரம்பண்ணை, நவ. 26: வெம்பக்கோட்டையில் சட்ட விரோதமாக கிராவல் மண், ஜல்லி கற்கள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து விருதுநகர் மாவட்ட கனிமவள துறை, வருவாய் துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் உள்ள மடத்துப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்வதற்காக நிறுத்தினர். ஆனால் அதிகாரிகளை பார்த்த டிரைவர்கள் லாரிகளை முன்னரே நிறுத்தி விட்டு இறங்கி தப்பியோடி விட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் லாரிகளை சோதனை நடத்திய போது அதில், அனுமதியின்றி உடை கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் லாரிகளை உடை கற்களுடன் பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: