நெல்லை: நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் சுகுமார் பேசியதாவது:
நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் பணியை மேற்கொள்ளும் போது, எந்த ஒரு தகுதியான வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விடுபடக் கூடாது. தகுதியற்ற நபர்களை, வாக்காளராக சேர்க்க கூடாது என வாக்காளர் பதிவு அலுவலர்கள்அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை பிஎல்ஓ மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை (நேற்று காலை 8 மணி வரை) 7 லட்சத்து 27 ஆயிரத்து 583 (51.30 சதவீதம்) கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 913 பேர் இறந்துள்ளனர். 1195 பேர் குறிப்பிட்ட முகவரியில் இல்லாததால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளனர். 18 ஆயிரத்து 933 பேர் நிரந்தரமாக மாறிச் சென்றுள்ளனர். இவ்வாறாக மொத்தம் 75 ஆயிரத்து 41 பேர் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான பணிகளில், ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அரசியல் கட்சியினர் உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சுகுமார் பேசினார்.
