தொண்டி: தொண்டி அருகே மர்மமான முறையில் புள்ளி மான் இறந்து கிடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே வனப்பகுதியில் புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. இவை இரை, குடிநீருக்காக அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் புகுந்துவிடுகின்றன. அப்போது தெருநாய் கடித்து மான்கள் உயிரிழப்பது தொடர்கிறது. இந்நிலையில், தொண்டி அடுத்த வட்டானம் குளம் பகுதியில் நேற்று புள்ளிமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானின் உடலை மீட்டனர். பின்னர், கால்நடை மருத்துவர் மூலம் மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், `உயிரிழந்தது 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஆகும். மானின் உடலில் பெரிய அளவில் காயங்கள் ஏதும் இல்லை. தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்திருக்கலாம்’ என்று தெரிவித்தனர்.
