நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு உட்பட்டே கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும்: ஒன்றிய அரசு எச்சரிக்கை

சென்னை: நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு உட்பட்டே கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவதை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளன. நிலைமை சீராகும் வரை அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை – கோவை இடையிலான விமானக் கட்டணம் 10 முதல் 15 மடங்கு அதிகரித்துள்ளது. கட்டண கொள்ளை புகார்கள் குவிந்ததை அடுத்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வார விடுமுறையில் சொந்த ஊர் சென்று திரும்புவோர் வசதிக்காக நாளை நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் மறுமார்க்கத்தில் திங்களன்று இயக்கப்படுகின்றன.

Related Stories: