பைக் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பலி

திருக்கோவிலூர், ஜன. 7: திருக்கோவிலூர் அடுத்த டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் பிரகாஷ்(40). இவர் கடந்த பத்து வருடமாக எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் வேலை நிமித்தமாக அருங்குறிக்கை பகுதிக்கு  வந்து பணியை முடித்துவிட்டு மீண்டும்  குன்னத்தூருக்கு வரும்போது கொடியூர் கிராமத்தின் அருகே பின்னால் கரும்பு லோடு ஏற்றி கொண்டு வந்த டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலே இறந்தார்.

தகவல் அறிந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>