சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

சங்கரன்கோவில்,நவ.22: சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தலைமை ஆசிரியர்கள் தெய்வ பிரியா, கீதா வேணி தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி டாக்டர் ராணி குமார் ஆகியோர் கலந்து கண்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 266 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 512 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கவுசல்யா, நகர செயலாளர் பிரகாஷ், ஆசிரியர்கள் சங்கர்ராம், வனராஜ், சுசீலா, பொன்மேகலா, திமுக மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், அப்பாஸ், ஜான்சன், கவுன்சிலர்கள் புனிதா, செல்வராஜ், அண்ணாமலை புஷ்பம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜய் பிரியா, பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் அப்துல் ரகுமான், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செல்வின், முத்துலட்சுமி, சங்கரேஸ்வரி, ஆதித்தன், சதீஷ், பாலாஜி, ஜெயக்குமார் உள்படபலர் கலந்து கொண்டனர்.

Related Stories: