துணைவேந்தர்கள் நியமன மசோதா தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு டிச.2க்கு ஒத்திவைப்பு

சென்னை: துணைவேந்தர்கள் நியமன மசோதா தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு டிச.2க்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 21 பல்கலைக்கழகங்கள் தலைவர் இல்லாமல்
செயல்பட்டு வருகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ‘மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும். பல்கலை. துணைவேந்தர் நியமன மசோதாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்’ எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: