தியாகதுருகம் அருகே மணிமுக்தாற்றில் துர்க்கை அம்மன் சிலை கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி, ஜன. 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சித்தலூர் மணிமுக்தாற்றில் நேற்று முன்தினம் மாலை 2 மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது சுமார் ஒரு அடி உயரமுள்ள துர்க்கை அம்மன் வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலையை அருகில் உள்ள சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஒப்படைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  சிலையை மீட்டு கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>