×

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்: ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை

 

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆசிய நாடுகள் பயணத்தின்போது டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளிடையே ராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில், டோக்கியோவில் நாடாளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி பேசுகையில், ‘தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தினால் ராணுவம் மூலம் ஜப்பான் பதிலடி கொடுக்கும்’ என்றார்.

இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாத பொருள் ஆகியுள்ளது ஜப்பான் பிரதமரின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கோரி சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருவதும், தைவான் மீது போர் விமானங்களை பறக்கவிட்டு அச்சுறுத்தி வரும் நிலையில் ஜப்பான் பிரதமரின் இந்த பேச்சு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Tags : CHINA ,TAIWAN ,JAPAN ,PRIME ,Tokyo ,Sane Takaichi ,US ,President Trump ,
× RELATED அமெரிக்க கால்பந்து வீரர் உடனான மாடல்...