×

நேபாளத்தில் ஜென் இசட் போராட்டத்தை ஒடுக்கிய அரசு உயரதிகாரி திடீர் கைது

காத்மண்ட்: நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜென் இசட் இயக்கப் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டங்களின்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உட்பட சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான சம்பவங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதற்கு புதிதாக பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா ஒப்புதல் அளித்தார்.

இதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் உள்ளிட்டோர் கடந்த சனியன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைமை அதிகாரியும் நேற்று கைது செய்யப்பட்டார். ஜென் இசட் இயக்கத்தை ஒடுக்கியதில் ஒடுக்கு முறைக்கு காரணமாக உயரதிகாரிகள் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்த மாவட்ட தலைமை அதிகாரி ரிஜால் காத்மண்டுவில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Tags : Nepal ,Gen Z ,Kathmandu ,
× RELATED இந்தோனேஷியாவில் நடுக்கடலில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் 21 பேர் மீட்பு