×

இந்தோனேஷியாவில் நடுக்கடலில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் 21 பேர் மீட்பு

பாலு: இந்தோனேஷியாவில் வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள தலியாயு தீவில் உள்ள துறைமுகத்தில் இருந்து வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கேமாவை நோக்கி ஞாயிறன்று நஸிலா 05 என்ற படகு சென்றது. இந்த படகு அவ்வப்போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகும்.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக படகின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. இதன் காரணமாக அதில் இருந்த சுற்றுலா பயணிகள் 21 பேரும் ஒரு நீண்ட மிதவை படகில் ஏறியுள்ளனர். இதனை தொடர்ந்து தேசிய தேடல் மற்றும் மீட்பு குழுவினர் நேற்று காலை 2 மீட்பு கப்பலுடன் சென்று அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

Tags : Mediterranean Sea ,Indonesia ,NASILA ,TALIAYU ISLAND ,NORTHERN MOUNTAINOUS PROVINCE ,KEMA ,NORTH SULAWESI PROVINCE ,
× RELATED இஸ்ரேலியர்களை கொன்றால்...