தண்டராம்பட்டில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

தண்டராம்பட்டு, ஜன.5: தண்டராம்பட்டில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் கே.பி.ஆர்.ரமேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயலாளர் திவ்யபாரதி ஜெயப்பிரகஷ், பொருளாளர் ரங்கநாயகிஅருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஊராட்சிகளில் உள்ள அனைத்து அரசு நத்தம் புறம்போக்கு நிலங்களை அளந்து காட்ட வேண்டும். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் மாநில கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் நடைபெறும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் ஊராட்சி மன்ற தலைவரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

அரசு மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களும், பசுமை வீடு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் கழிவறை, ஆடு, மாடு வழங்கும் திட்டம் போன்றவற்றை பெறும் பயனாளிகளை அடையாளம் காட்டக் கூடியவர் ஊராட்சி மன்ற தலைவராக தான் இருக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  முடிவில் கவிதா ராஜசேகர் நன்றி கூறினார். படவிளக்கம்: தண்டராம்பட்டில் நேற்று நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் அதன் தலைவர் கேபிஆர் ரமேஷ் பேசினார்.

Related Stories: