மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி பெற்றது. இந்நிலையில் முதல்முறையாக உலகக்கோப்பை வென்று இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது.
