பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அலெக்சாண்டர் அட்டகாசம்: டேவிடோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நான்டெரெ நகரில் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டி ஒன்றில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அர்ஜென்டினா வீரர் கேமிலோ யுகோ காரபெலியை அபாரமாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் கஸாக்சை வீழ்த்தி, ஸ்பெயின் வீரர் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் – அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் ஸ்வெரெவின் ஆதிக்கமே காணப்பட்டது.

முதல் செட்டில் துடிப்புடன் ஆடிய அவர், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும், டேவிடோவிச் சற்று சுதாரித்து ஆடியபோதும், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் ஸ்வெரெவ் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற அவர் காலிறுதிக்குள் நுழைந்தார்.

Related Stories: