பனையூர் இசிஆர் சாலையில் விஜய் கட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: இசிஆர் சாலை பனையூரில் இயங்கி வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில், அது வெறும் புரளி என தெரியவந்தது. சென்னை இசிஆர் சாலையில் பனையூர், 8வது அவென்யூவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அவை சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்துக்கு தகவல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் இருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்ததும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தை சேர்ந்த 3 வெடிகுண்டு நிபுணர்கள், கானத்தூர் போலீசார், பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தீவிர வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீசாருக்கு தெரியவந்தது.

Related Stories: