திருச்சி, டிச. 31: திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது அம்மன் டிஆர்ஒய் ஸ்டீல் (பி) லிமிடெட் நிறுவனம். தமிழகம் முழுவதும் சுமார் 350 அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு சிறந்த கம்பி அம்மன் டிஆர்ஒய் கம்பிகள் என இன்ஜினியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவராலும் விரும்பி வாங்கப்பட்டு வருகிறது. தற்போது அம்மன் டிஆர்ஒய் ஸ்டீல் நிறுவனம் சார்பில் 6 மாதத்திற்கான இன்ஜினியர்ஸ், கான்ட்ராக்டர்ஸ், பில்டர்ஸ், பார்பெண்டர்களுக்கு சிறப்பு பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தி இதன்மூலம் அதிக எடையில் அம்மன் டிஆர்ஒய் கம்பிகளை வாங்கி இலக்கை அடைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகின்றனர்.