தாராபுரம் நகராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்

 

தாராபுரம், அக். 29: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன, வார்டு பகுதிகளில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன்படி 1வது வார்டில் நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையிலும், 2வது வார்டில் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, பொறியாளர் சுகந்தி, நகராட்சி மேலாளர் முருகராஜ், ஆகியோர் முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மூன்றாவது வார்டுக்கான மக்கள் சந்திப்பு கூட்டம் வார்டு உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதே போல் அனைத்து வார்டுகளிலும் அந்தந்த வார்டு கவுன்சிலர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது.
நடைபெற்ற வார்டு கூட்டங்களில் அந்தந்த வார்டுகளை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள், நகராட்சியால் செய்து முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும் விளக்கம் கேட்டு அறிந்தனர்.

Related Stories: