கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு எடப்பாடி ரூ.1 லட்சம் பரிசு

 

சென்னை: பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து சென்னை, கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வீராங்கனை ஆர்.கார்த்திகா துணை கேப்டனாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்திற்கு கார்த்திகாவை அழைத்து பூங்கொத்து மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரது பயிற்சியாளர் கே.ராஜ் உடன் இருந்தார்.

Related Stories: