ஏஐ தொழில்நுட்ப செலவு அதிகரிப்பு: 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு

 

சியாட்டில்: ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் செலவினங்களை குறைக்கும் நோக்கில் சுமார் 14000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசானில் 1000த்துக்கும் மேற்பட்ட ஜெனரேட்டிவ் ஏஐ சேவைகள் மற்றும் பயன்பாடுகள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையானது அது உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளவற்றில் ஒரு சிறிய பகுதியாகும்.

2024ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே மிசிசிப்பி, இன்டியானா, ஓஹியோ மற்றும் வட கரோலினாவில் உள்ள தரவு மையத்தின் திட்டங்களுக்கு அமேசான் தலா 10மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தயாரிப்புக்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக உள்கட்டமைப்புக்களை மேம்படுத்தி வருகின்றது. அமேசான் ஏஐ துறையில் ஓபன்ஏஐ , கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் அமேசான் நிறுவனம் நேற்று ஊழியர்களை குறைப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அமேசானின் மக்கள் அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூத்த துணை தலைவர் பெத் கலெட்டி ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில்,” அதிகாரத்தை மேலும் குறைப்பதன் மூலமும், அடுக்குகளை அகற்றுவதன் மூலமும் வளங்களை மாற்றுவதன் மூலமும்எங்கள் மிகப்பெரிய போட்டிகளில் முதலீடு செய்வதையும் எங்கள் வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு மிகவும் முக்கியமானது என்பதையும் உறுதி செய்வதற்காகவும் இன்று நாங்கள் பகிர்ந்து கொள்ளும் பணி குறைப்புகள் உள்ளன” என்றார்.

பணி நீக்கம் செய்பவர்களுக்கு புதிய வேலையை தேடிக்கொள்வதற்கு 90நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வேலையை தேடிக்கொள்ள இயலாதவர்களுக்கு பணி நீக்க ஊதியம், சுகாதார காப்பீட்டு சலுகைகள் உள்ளிட்ட இடைக்கால உதவிகள் வழங்கப்படும். அமேசானில் சுமார் 35000கார்ப்பரேட் ஊழியர்கள் உள்ளனர். மொத்தம் 15லட்சம் பணியாளர்கள் உள்ளனர். தற்போது பணி நீக்கம் செய்யப்படுவது சுமார் 4 சதவீதம் குறைப்பு ஆகும்.

Related Stories: