நொவி சாட்: யு23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 65 கிலோ ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவின் சுஜீத் கல்கல் அபாரமாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்றார். செர்பியாவின் நொவிசாட் நகரில், 23 வயதுக்கு உட்பட்டோர் மோதும் யு23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. 65 கிலோ ஆடவர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் நேற்று, இந்திய வீரர் சுஜீத் கல்கல் (22), உஸ்பெகிஸ்தான் வீரர் உமித்ஜோன் ஜலலோவ் மோதினர்.
இந்தாண்டு துவக்கத்தில் நடந்த சீனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த ஜலலோவ் கடும் போட்டி எழுப்பியபோதும், அதை சாமர்த்தியமாக கையாண்ட சுஜீத் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 65 கிலோ ஆடவர் ஃப்ரிஸ்டைல் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் முறை தங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
