6 மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர், ஹெச்எம் அதிரடி கைது

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 9வயதான மாணவிக்கு கடந்த 24ம்தேதி அதே பள்ளி ஆசிரியர் பாஸ்கர் (53), பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் பாஸ்கர், மாணவியின் அருகில் நின்று படிக்க சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், இதை அந்த மாணவி தோழிகளிடம் கூறியபோது, இதே போல் 6 மேலும் மாணவிகளிடம் நடந்து கொண்டதும், இதுதொடர்பாக மற்ற ஆசிரியர்கள் மூலம் தலைமையாசிரியை விஜயாவிடம் (55) தெரிவிக்கப்பட்டதும், அவர் ஆசிரியரை வேறு வகுப்பிற்கு மாற்றிவிடலாம் என பெற்றோரிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும், பெற்றோர் கேட்டதற்கு அலட்சியமாக பதில் அளித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் பாஸ்கரை நேற்று கைது செய்தனர். இதுபற்றி கல்வித்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த தலைமையாசிரியை விஜயாவும் கைது செய்யப்பட்டார்.

Related Stories: