புத்தக திருவிழாவை காண நாள்தோறும் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர். இவர்கள், இந்த புத்தக கண்காட்சியை காண வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மாணவர்களின் புத்தக வாசிப்பை அதிகரிக்கும் நோக்கில் இம்முறை முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.150க்கு கூப்பன் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், இம்முறை 2 ஆயிரம் கூப்பன்கள் வழங்கப்படவுடுள்ளது. இன்று முதல் அரசு பள்ளி மாணவர்கள் இந்த புத்தக கண்காட்சியை காண மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
