பாலக்காடு, அக்.18: பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரை அடுத்த வெம்பல்லூரை சேர்ந்தவர் தேவு (75). இவர் கடந்த அக்.10ம் தேதி தேன்குறிச்சி பனயஞ்சிராவிலுள்ள பால் சொசைட்டிக்கு பால் கொடுத்து விட்டு சாலையோரம் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட், மாஸ்க் ஆகியவை அணிந்த மர்ம நபர் வழிகேட்பது போல் மூதாட்டியின் அருகில் பைக்கை நிறுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து மூதாட்டி உறவினர்களுடன் குழல்மந்தம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதன்பேரில் எஸ்.ஐ ஷியாம் ஜார்ஜ் தலைமையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து கொடுவாயூர் அடுத்த நவக்கோட்டைச் சேர்ந்த ஷாஜகானை (51) மடக்கி பிடித்தனர். இவர் கொடுவாயூர் யூனிட் எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழல்மந்தம் போலீசார் ஷாஜகானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
