வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்ராமி ஜவுதா மஞ்சா அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தனர். அப்போது வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறைக்கு முன்னதாக அதிகாரிகள் எதிர்கொள்ளும் அழுத்தம் குறித்து கவலை தெரிவித்தனர். இதற்கு தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி அதிகாரிகள் தங்களது பணிகளை செய்யும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று பிரதிநிதிகள் குழுவிடம் உறுதியளித்துள்ளது.

Related Stories: