பஞ்சாப் டிஐஜி வீட்டில் 2.5 கிலோ தங்கம் ரூ.7.5 கோடி ரொக்கம் பறிமுதல்

சண்டிகர்: தொழிலதிபர் ஒருவரிடம் மாதம் ரூ.8 லட்சம் மாமூல் கேட்ட வழக்கில் பஞ்சாப் டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் சிபிஐ அதிகாரிகளால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹர்சரண் சிங் புல்லருக்கு சொந்தமான சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின்போது, ரூ.7.5 கோடி ரொக்கப்பணம், 2.5 கிலோ தங்க நகைகள், ரோலக்ஸ், ரேேடா போன்ற 26 ஆடம்பர கைக்கடிகாரங்கள், விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், புல்லரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது பினாமி என சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள் பெயரில் உள்ள 50க்கும் மேற்பட்ட அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: