செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் உலக மாணவர் தினம் கொண்டாட்டம்

திருப்பூர், அக். 17: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக கவிஞர் கவி உழவன் கலந்துகொண்டு ‘இளைய சமுதாயமே எழுக’ என்னும் தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் அருள்சகோதரி அருள்சீலி, கல்லூரியின் முதல்வர் சகாய தமிழ்ச்செல்வி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகத்துறை செய்திருந்தது.

 

Related Stories: