தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கருத்து திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

திருவாரூர், டிச.29: திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா வருடாந்திர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அப்போது, காவ லர்களின் கவாத்து பயிற்சி, காவலர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதப்படை காவலர் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை பயன்படுத்தக்கூடிய வாகனங்கள், கலவரத்தை ஒடுக்க பயன்படுத்த கூடிய வஜ்ரா உள்ளிட்ட வாகனங்கள், முக்கிய கோப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ரோந்து வாகனங்கள் 24 மணிநேரமும் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், பொதுமக்களின் அவசர உதவி, குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பணிகளில் போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக, ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா போலீசார் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட எஸ்பி டாக்டர் துரை, ஏடிஎஸ்பி கார்த்திக், ஆயுதப்படை டிஎஸ்பி சலீம் ஜாவித் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: