டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து ஹமாஸ் பிடியில் உள்ள உயிருள்ள 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 4 பிணை கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இதில் ஒரு உடல் பிணை கைதியின் உடல் அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இதனால் அமைதி ஒப்பந்தம் செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில்,‘‘கடைசி பிணை கைதியின் உடல் வரும் வரையில் முயற்சிகளை நிறுத்த மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார். ஹமாஸ் படையின் செய்தி தொடர்பாளர் ஹசேம் காசம், அமைதி ஒப்பந்தத்தின்படி உடல்களை ஒப்படைப்பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கிழக்கு காசாவில் இஸ்ரேல் துப்பாக்கிசூடு நடத்தி அமைதி ஒப்பந்த விதிகளை மீறி வருகிறது என தெரிவித்தார். உடல்களை ஒப்படைக்காவிட்டால் காசாவுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
