பொதுமக்கள் குறை தீர் முகாமில் புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இன்று (15.10.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 16 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இம்முகாமின் போது G.சுப்புலட்சுமி, துணை ஆணையாளர் (நிர்வாகம்) அவர்கள் உடன் இருந்தார்.

Related Stories: