உலக அரங்கில் இந்தியா வளர்ந்து வரும் சக்தி: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுவுடன் கடந்த வாரம் மும்பைக்கு இரண்டு நாள் பயணமாக வந்த பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் தனது இந்தியா சுற்றுப்பயணம் குறித்து நாடாளுமன்றத்தில் கூறியதாவது: இந்தியா உலக அரங்கில் வளர்ந்து வரும் சக்தியாகும். 2028 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை அடையும் பாதையில் உள்ளது.

நாம் ஏற்கனவே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட குடும்ப பிணைப்பு மற்றும் வரலாற்று தொடர்பு ஆகியவற்றுடன் கூடுதலாக, எதிர்காலத்தாலும், நமக்கு முன்னால் காணும் நம்பமுடியாத வாய்ப்புகளாலும் நாம் ஒன்றுபட்டுள்ளோம். அதனால்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இவ்வாறு தெரிவித்தார்.

* ஆங்கிலம் தெரியலயா… விசா கிடையாது
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா உட்பட விசா விண்ணப்பதாரர்கள் மீது கடுமையான புதிய ஆங்கில மொழித் தேர்வை இங்கிலாந்து அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இங்கிலாந்து செல்ல விரும்பும் நபர்களின் ஆங்கிலம் பேசுதல், கேட்டல், வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றின் தரநிலை பிளஸ் 2 வகுப்புக்கு சமமாக இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: