11 மையங்களில் நடந்தது சிறு, குறு தொழில் சங்கம் சார்பில் ஜிஎஸ்டி, வருமான வரி தாக்கல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர், டிச.28: பெரம்பலூரில் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கம் சார் பில் ஜிஎஸ்டி, இவே பில்லிங், வருமானவரி தாக்கல் செய்வது குறித்து விழி ப்புணர்வு கூட்டம் நடந்தது. பெரம்பலூரில் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கம் சார்பில் ஜிஎஸ்டி, இவே பில்லிங், வருமான வரி தாக்கல் செய்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார், தொழில் வளத்தை பெருக்கி வருமானத்தை உயர்த்துவது குறித்தும், ஆடிட்டர் கிருஷ்ணசாமி ஜிஎஸ்டி, இவே பில்லிங், வருமான வரி தாக் கல் செய்வது குறித்தும் பேசினர். தொடர்ந்து கனரா வங்கி முதுநிலை மேலாளர் ராஜ்குமார் வங்கி சேவை, கடனு தவி குறித்தும், சிட்கோ கிளை மேலாளர் ஜெயலட் சுமி தொழில் துவங்குவது குறித்தும் விளக்கமளித்தனர். கூட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறி னார்.

Related Stories: