சீர்காழி நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி

சீர்காழி, டிச.28: சீர்காழி நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளில் தினகரன் செய்தி எதிரொலியால் கொசுமருந்து அடிக்கும் பணி துவங்கியது. சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் கொசு மருந்து நீண்ட நாட்களாக அடிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 26ம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து நாகை கலெக்டர் பிரவின் பி நாயர், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், சீர்காழி நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்க உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி ஆலோசனையின் பேரில் நகராட்சி பணி தள மேற்பார்வையாளர் சீத்தாலட்சுமி சீர்காழி நகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பணியாளர்களை கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியை தொடங்கினார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொசு மருந்து அடிக்க உத்தரவிட்ட நாகை கலெக்டர், கூடுதல் கலெக்டருக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: