14 மையங்களில் நடந்தது முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க 30ம் தேதி நேர்முகத்தேர்வு14 மையங்களில் நடந்தது முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க 30ம் தேதி நேர்முகத்தேர்வு

கரூர், டிச. 28: முதுகுதண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க 30ம்தேதி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 18வயதுக்கு மேற்பட்ட கால்களில் முழுமையாக வலுவிழந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட டிசம்பர் 30ம்தேதி அன்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 7ல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலை 10மணி முதல் மதியம் 2மணி வரையில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. எனவே, இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விருப்பம் உள்ள முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றம் நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (3) ஆகியவற்றுடன் நாளை (29ம்தேதி) மாலை 5மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்திட வேண்டும். விண்ணப்பிக்க இயலாதவர்கள் நேர்முகத் தேர்வில் நேரிடையாகவும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: