அரசு தொழிற்பயிற்சி பள்ளி புதிய கட்டிடம் அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு

 

கமுதி, அக். 11: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – மதுரை சாலையில் கோட்டைமேடு அருகே அரசு தொழிற்பயிற்சி பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், மாநில பொதுக் குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் நேதாஜி சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராஜ், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: