தர்மபுரி, டிச.17: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூத்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயன் மனைவி செல்லியம்மாள்(55). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் குள்ளாத்திரம்பட்டி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றார். அப்போது, கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து வந்துள்ளது. கான்கிரீட் கலவைக்காக செல்லியம்மாள் மண் அள்ளி கொட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது சேலை ஜல்லி இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது. இதில், இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு படுகாயமடைந்த செல்லியம்மாள், ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதை கண்ட சக தொழிலாளர்கள், அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, செல்லியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
