திருச்சி தலைமை செயலகத்தில் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த அமைச்சர்

 

திருவெறும்பூர், அக். 10: திருவெறும்பூர் பகுதியில் உழவர் சந்தை அமைத்து தரவேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட, கணேஷ் நகர், உய்யகொண்டான் வாய்க்கால் கரைப்பகுதியில், அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தில் திருவெறும்பூரை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி உழவர் சந்தை ஒன்றை அமைத்து தர ஆவண செய்யுமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்‌.

Related Stories: