திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கைப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி

 

திருச்சி, அக். 10: திருச்சிராப்பள்ளி சமயபுரம் எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கைப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி காவேரி குளோபல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற ராக்சிட்டி சகோதயா மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டி 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் சமயபுரம் எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று முதலிடம் பெற்றனர். ஆந்திர மாநிலம் ராஜ்முந்திரி பிரகாஷ் வித்யாநிகேதன் பள்ளியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான போட்டியில் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்று தேசிய அளவிலான கைப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சென்னை கோல சரஸ்வதி வைஷ்ணவ் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற கிளஸ்டர்- 6 கோ-கோ விளையாட்டுப்போட்டி 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி மாணவிகள் மூன்றாவது இடத்தை வென்றுள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களைப் பள்ளியின் தலைவர் ராமசாமி, செயலர் சுவாமிநாதன், பொருளர் செல்வராஜன், துணைத்தலைவர் குமரவேல், இணைச்செயலர் சத்தியமூர்த்தி, பள்ளியின் தலைமைச் செயல்அலுவலர் துளசிதாசன், பள்ளிமுதல்வர் பொற்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Stories: