அம்பை வனக்கோட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அம்பை, அக். 8: அம்பை வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நாளை மறுதினம் (10ம் தேதி) நடைபெற உள்ளது. இதுகுறித்து அம்பை வனக்கோட்ட துணை இயக்குநர், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் வன உயிரினக் காப்பாளர் காந்த், வனத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்டம், துணை இயக்குநர் அலுவலகக் கூட்டரங்கில் நாளை மறுதினம் (10ம்தேதி) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அம்பை மற்றும் பாபநாசம், கடையம் வனச்சரகப் பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: