உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, இயற்பியலுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு!!

ஸ்டாக்ஹோம் : உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, இயற்பியலுக்காக அமெரிக்காவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு விஞ்​ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினை​வாக ஆண்​டு​தோறும் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு வென்​றவர்​கள் குறித்த அறி​விப்பை ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு வெளியிடுகிறது.

முதல்நாளான நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், 2025ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி வழங்கப்பட இருக்கிறது.

Related Stories: