கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ. 21.95 கோடியில் ராஜகோபுரம்

சுசீந்திரம், அக். 1: கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயிலில் ரூ. 21 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் செலவில் 9 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு சமீபத்தில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இக் கோபுரம் கட்ட உபயதாரதாக குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபாஜி ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதற்கான அரசாணை மற்றும் மாதிரி வரைப்படத்தினை கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பிரபா ஜி ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து, வழங்கி வாழ்த்து பெற்றார்.

Related Stories: