அரசு கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் தூய்மை பணி

சாத்தூர், செப்.26: சாத்தூர் ரயில் நிலையத்தில் அரசுக்கல்லூரி மாணவர்கள் தூய்ைம பணியில் ஈடுபட்டனர்.  சாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் சாத்தூர் ரயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.

தூய்மைபடுத்தும் பணியை சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், கணிதவியல் துறை பேராசிரியை அழகு மீனா, முன்னாள் கல்லூரி மாணவர் சங்க தலைவர் முத்தையா ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து போதை பொருட்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Related Stories: