கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் லெனினிஸ்ட் வலியுறுத்தல்

குளச்சல்,டிச.20: குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) சார்பில் வினோத் மிஸ்ரா 27வது நினைவு தினம் குளச்சல் அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சுசீலா தலைமையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினர் எஸ்.எம். அந்தோணி முத்து, மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் ரஞ்சன், செல்வராஜ், மெர்சி, மேரி ஸ்டெல்லா,பேட்றஸ், வெண்ணிலா, மேரி டெய்சி லெட், ராதா, செலின் ரோஜா,ஜெசிகா, பனியம், ஸ்டீபன், கார்லிங் ஜோஸ்லின், ரோஸ்மேரி,ரீனா, மரிய ஸ்டான்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் குளிக்கும் குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். குளச்சல் பயணியர் விடுதி கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ₹25 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். கோடிமுனை பிரண்ட்ஸ் காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரேசன் கடையை உடனே திறக்க வேண்டும். வரும் ஜனவரி 7 ம் தேதி திங்கள்நகரில் பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: